திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், உள்ள அனைத்து காவல் உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான, மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை, போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், மீது கடும் நடவடிக்கை, மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும், மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
முகம் அடையாளம் காணும், செயலியை வாகன தணிக்கையிலும், ரோந்து பணியின் போதும் சந்தேகப்படும், படியான நபர்கள் யாரேனும் சுற்றி திறிந்தாலோ, மேற்படி செயலியை பயன்படுத்தி மேற்படி, சந்தேக நபர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா, மற்றும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளா, என கண்டறிந்து மேற்படி நபர்கள், மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி, மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்கள். இதன்படி முக அடையாளம் காணும் செயலியை அதிக முறை பயன்படுத்தி, எதிரிகளை பிடிக்க உதவியாக இருந்து வரும் கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு.ஜான்பிரிட்டோ, களக்காடு காவல் ஆய்வாளர் திரு.ஜோசப் ஜெட்சன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் திருமதி.ராஜகுமாரி, மற்றும் சிவந்திப்பட்டி, அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபருக்கு, மூன்று வருட சிறை தண்டனை 3 ஆயிரம் அபராதம் பெற்று கொடுத்த காவல் ஆய்வாளர் திருமதி.சாந்தி, ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.மாரிராஜன், திரு.ராஜு, அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.