திருநெல்வேலி: மாவட்டம் திருவேங்கட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காளிராஜ் என்பவர் அடிதடி வழக்கு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வருவதால் இவரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் குருவிகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு திருவேங்கட காவல் நிலையம்) திரு. கண்ணன் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* அவர்கள் பரிந்துரையின் பேரில் *திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள்* மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி 25.09.2019-ம் தேதி மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.