கோவை: சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அஹிலே சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பாக, நேற்று 16.03.2022 ஆம் தேதி 2330 மணியளவில் , மேற்படி பள்ளிவாசல் எதிர்ப்புறம் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வரும் சுரேஷ் (41) த.பெ சுப்ரமணி, 72, காமராஜர் சாலை, உப்பிலிபாலயம் , கோவை என்பவர், தனது கடை முன்பாக வந்த திருநங்கைகள் மது , கனிமொழி, நிகிதா, பாப்சி ஆகிய நான்கு நபர்களும் கடை முன்பாக இருந்த தன்னை ஆபாச வார்த்தைகளால் பேசியும், மாராப்பை அவிழ்த்து காட்டி அசிங்கப்படுத்தியும், தன்னை கடையில் இருந்த கம்பியை எடுத்து தன்னை கொலை செய்து.
விடுவதாக மிரட்டியதாக 17.03.2022 ஆம் தேதி அன்று சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண் அவர்களிடம் புகார் அளித்தார் உடனடியாக விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார் போலீசார் விசாரணை செய்து சிங்காநல்லூர் காவல் நிலைய குற்ற எண் 173/2022 u/s 294(a)(b),323,506(ii) IPC என வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மேற்படி திருநங்கைகள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் இருப்பதால் மேலும் பல வழக்குகள் பதிவு செய்வதற்கு காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.