மதுரை : திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடுவில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடுபோன வழக்கை தாண்டிக்குடி காவல் துறையினர் ,விசாரித்து முடிக்க வேண்டும். அதை தமிழக உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, உத்தரவிட்டது. கோவை சென்றுவிட்டு வீடு திரும்பினோம். வீட்டின் கூரை உடைக்கப்பட்டு 60 சவரன் தங்க நகைகள், மற்றும் பணம் திருடுபோனது. தாண்டிக்குடி காவல் துறையினர், வழக்குப் பதிந்தனர். வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,காவல் துறையினருக்கு, மாற்றக்கோரி திண்டுக்கல் எஸ்.பி.,யிடம் மனு அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.
கண்காணிப்புக் கேமரா பதிவுகள், விரல் ரேகைகளை காவல் துறையினர், சேகரித்துள்ளார். பாரபட்சமற்ற விசாரணையை, மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், என தெரிவித்தது. தற்போது விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றினால், அது தாண்டிக்குடி காவல் துறையினரின், முழு விசாரணையையும் பாதிக்கும். எந்த நோக்கத்திற்கும் உதவாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தாண்டிக்குடி காவல் துறையினர், 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அதை தமிழக உள்துறை செயலாளர் கண்காணிக்க வேண்டும் என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி