தஞ்சாவூர் : கும்பகோணம் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது. கும்பகோணம், மார்ச்.16- கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து காணமல் போவதாக தொடர்ந்து கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி கும்பகோணம் உட்கோட்டம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு. அசோகன் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர்
திரு.கீர்த்திவாசன், எஸ்எஸ்ஐ ராஜா.
Hc சுரேஷ் , பார்த்திபன், பாலசுப்ரமணியன், நாடிமுத்து, ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அரசு மருத்துவமனை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கடந்த 14.03.2022 -ம் தேதி அன்று அரசு மருத்துவமனை பகுதியில் ச ந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதி உடையூரை சேர்ந்த சிவாஜி மகன்
சந்தோஷ் -19 , மணல்மேடு பகுதி திருப்பங்கூர் ,104.நரிமுடுக்கு.
பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் மணிகண்டன் -21, திருப்பங்கூர், நரிமுடுக்கு பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் ராகுல் -20 என்பதும், இம்மூன்று நபர்கள் தான் இப்பகுதியில் காணாமல் போன இருசக்கர வாகனங்களை திருடி சென்றவர்கள் என்பதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.அதனை தெடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்