மதுரை : உத்தங்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை 2 பேர் கைது.மதுரை மார்ச் 15.கே புதூர் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உத்தங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு பஸ் ஸ்டாப்பில் பயணிகளிடம் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ஒத்தக்கடை பாரதி நகரைச் சேர்ந்த ஜெயராமன்68, சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயலை சேர்ந்த சேவுகப்பெருமாள் 48 ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 572 லாட்டரி சீட்டுகளையும் பணம் ரூபாய் ஆயிரத்து 970 , ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி