திருநெல்வேலி: மானூர் அருகே பள்ளிவாசலில் பீரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.02.03.2022திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட மேல தென்கலம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 11.02.2022-ம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர் பீரோவை உடைத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து பள்ளிவாசல் தலைவர், அப்துல் காதர்(57),என்பவர் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் மீது விசாரணை மேற்கொண்டு வந்த மானூர்காவல்நிலையஉதவிஆய்வாளர்திரு.முனியசாமிஅவர்கள்தலைமையிலான முதல் நிலை காவலர்கள் திரு. பேதுரு, திரு.பட்டன் ஆகியோர் திருட்டில் ஈடுபட்ட செய்துங்கநல்லூரை சேர்ந்த தமீம்அன்சாரி(29), என்பவரை இன்று கைது செய்து எதிரியிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.1500 பணத்தை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.