சென்னை : ஆவடி அடுத்த அண்ணனுார் ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை சந்தேகத்திற்கு , இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை, திருமுல்லைவாயல் காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், அம்பத்துார் , திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ராமு, (25), என தெரிந்தது. இவர், கடந்த 28 ம் தேதி, அண்ணனுார் சிவசக்தி நகரைச் சேர்ந்த சுகுணா டைலர் கடையின், பூட்டை உடைத்து 3,000 ரூபாய் மற்றும் பட்டுப் புடவைகள், திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இவர், அம்பத்துாரைச் சேர்ந்த, அவரது கூட்டாளி மாயவன், என்பவருடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, திருமுல்லைவாயல்காவல் துறையினர், ராமுவை கைது செய்து நேற்று புழல் சிறையில், அடைத்தனர். தலைமறைவான மாயவனை தேடி வருகின்றனர்.ஏற்கனவே ராமு மீது, திருவள்ளூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில், திருட்டு வழக்குகள் உள்ளன.