தூத்துக்குடி : தூத்துக்குடி மில்லர்பரம் பகுதியை சேர்ந்த நாகராஜ், என்பவரின் மனைவி தனது இருசக்கர வாகனத்தை கடந்த (11.7.2022 )அன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது நிறுத்தி வைத்திருந்த அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாகராஜின் மனைவி நேற்று (12.07.2022) அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி தோப்புத் தெருவை சேர்ந்த மகபு பாஷா மகன் முகம்மது இப்ராஹிம் பஷீர் (23), என்பவர் மேற்படி நாகராஜ் மனைவியின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவக்குமார், வழக்கு பதிவு செய்து குற்றவாளி முகம்மது இப்ராஹிம் பஷீரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 50,000/- மதிப்பிலான இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.















