காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவளம் ரோடு பகுதியில் கடந்த 09- 09- 2019 அன்று இரவு 2.50 மணி அளவில், ஒரு புதிதாக கட்டப்பட்டு வரும் அப்பார்ட்மெண்டில் மின்சார வயர்களை அறுத்து விட்டு, அங்கிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் ஏற்றி திருடி சென்றனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் திரு.பாலமுருகன் மற்றும் FOP திரு.விக்னேஷ் ஆகியோர் நிலைமையை உணர்ந்து, காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துவிட்டு மர்மநபர்களை தேடி சென்றனர். அப்போது கடற்கரையோரம் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் 5 பேரையும் Inspector திரு.இராஜாங்கம் மற்றும் நிலைய காவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்கள் ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட கேளம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.பாலமுருகன் மற்றும் FOP திரு.விக்னேஷ் ஆகியோருக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்.