திருச்சி விமான நிலையத்தில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2000 அரிய வகை ஆமைகள் திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்துக்கு கோலாலம்பூரிலிருந்து இருந்து மலிண்டோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சார்ந்த பீர் முகமது முஸ்தபா அந்த விமானத்தில் இருந்து இறங்கி அவரின் உடைமைகளோடு நடந்து வந்தார்.
நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் இருந்த உடமைகளை சோதனை செய்தனர்.
விசாரித்த போது முதலில் பேனா, பென்சில் உள்ளிட்டவைகளை எடுத்து வருவதாக கூறினார். இவர் சீனாவிலிருந்து கோலாம்பூர் வழியாக திருச்சி வந்ததும் தெரிய வந்தது. சோதனையின் போது 8 அட்டை பெட்டியில் உயிரோடு இருக்க கூடிய 2000 அரிய வகை ஆமைகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
வனத்துறையினர் அந்த ஆமைகளை ஆய்வு செய்தபோது அவை சீனா வளரக்கூடிய அரிய வகை ஆமைகள் என்பதும், அவற்றை சீனாவில் இருந்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து 2000 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இவை நமது நாட்டின் சீதோசன நிலைக்கு இந்த ஆமைகள் ஏற்றத்தல்ல என்பதால் அவைகள் சீன நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி