திருச்சி: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குணசேகரன். நாளை அரியலூரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க அவர் இன்று காலை 8 மணியளவில் அரியலூருக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அரியலூர் அருகேயுள்ள சடைக்கன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது திடீரென்று ஒரு முதியவர் சாலையை கடக்க முயன்றார்.
இதனால் அவர் மீது மோதாமலிருக்க டிரைவர் ஜீப்பை திடீரென நிறுத்தினார். இதனால் ஜீப் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிஎஸ்பி குணசேகரன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரியலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி