திருச்சி: கடந்த 26.05.19-ம் தேதி திண்டுக்கல் ரோட்டில் கருமண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத இரு நபர்களில் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் ராஜேஸ்வரி என்பரவது தாலி செயினை அறுத்தது தொடர்பாக அளித்த புகாரின் அடைப்படியில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய குற்ற பிரிவு எண்-521/19ச/பி 392 வழக்குபதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் 18.09.19-ம் தேதி மண்ணார்புரம் பேருந்து நிலையம் அருகே எதிரி வைரமணி என்பவரை கைது செய்தும், அவரிடமிருந்து வழக்கு சொத்துக்களையும் கைப்பற்றினர். விசாரணையில் மற்றொரு எதிரி வீரகார்த்தி என்பவர் சிறையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் செயின் குற்றத்தில் எதிரியை கைது செய்தும், அவரிடமிருந்து வழக்கு சொத்துக்களையும் கைப்பற்றிய தனிப்படையினர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.