கோவை : கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா யமுனா தியேட்டரில் நடிகர் அஜித் நடித்த வலிமை என்ற திரைப்படம் கடந்த மாதம் 25-ந்தேதி வெளியிடப்பட்டது.தியேட்டரில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் அஜித் ரசிகர்களிடையே தகராறு இருந்து வந்தது.இந்த நிலையில் ரத்தினபுரி, பொங்கியம்மாள் வீதியைச் சேர்ந்த அஜித் ரசிகர் நவீன் குமார் ( வயது 22 ) என்பவர்தியேட்டர் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவர்மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள்.இதில் அவர் பலத்த காயம் அடைந்தார் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காட்டூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர் இதுதொடர்பாக பைக்கில் வந்த 2 பேர் மீது கொலை முயற்சி (307) உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .அங்குள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் இது தேடப்பட்டு வந்த ரத்தினபுரியில் வசித்துவந்த லட்சுமணன் (வயது 27)என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இவர் அஜித் ரசிகர் ஆவார், பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். தலைமறைவாக இருந்த லட்சுமணனை காட்டூர் போலீசார் நேற்றுநீலகிரி மாவட்டம் சேரம்பாடி யில் வைத்து நேற்று கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.விசாரணையில் இவர் அஜித் ரசிகர் என்றும்.அஜித் சினிமா பட டிக்கெட்டை நவீன்குமார் கூடுதல் விலைக்கு விற்றதால் ஏற்பட்ட மோதலில்இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்தது. .இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.