திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில், லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை பள்ளி கல்லூரிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்டம் முழுவதும் சிறப்பு ரோந்து மற்றும் சிறப்பு சோதனை மேற்கொள்ளுமாறு SP. திரு. பாஸ்கரன், உத்தரவிட்டதன் பேரில் மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்டம் முழுவதும் 8 நபர்களின் மீது குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து, சுமார் 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் கடைகளுக்கு சீல் வைக்குமாறு மாவட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 5000- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லாட்டரி விற்பனையில், ஈடுபட்ட 3 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ. 14,720- மதிப்புள்ள 372 லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இது போன்று குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என SP. திரு.பாஸ்கரன், கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.