திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 2நாட்களுக்கு குடிநீர் வராது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஆத்தூர் நீர் தேக்கத்தத்தில் இருந்தும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்தும் குடிநீர் வழங்கப்படுகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் குழாயில் வெள்ளியணை அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வரும் தண்ணீர் அனைத்தும் வீணாகி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் குழாய் செப்பனிடும் பணியை செம்மையாக செய்து வருகின்றனர் .இதனால் இன்றும் ,நாளையும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
.. இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் 2 நாட்கள் பொறுத்து கொள்ளுமாறும் .புதிய குழாய்கள் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அறிவுறுத்தி உள்ளார்.