போலி நியமன ஆணை, 4 பேர் மீது வழக்கு !
திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரகாரபட்டியை சேர்ந்த லட்சுமணன் (48), என்பவர் மகன்களுக்கு ரயில்வேயில், வேலை வாங்கித் தருவதாக கூறி ராஜேந்திரன், ரகு, கோவிந்தன், சந்தானம் ஆகிய 4 பேர் ரூ 3 லட்சம் வாங்கிக்கொண்டு போலி நியமன ஆணை கொடுத்துள்ளனர். லட்சுமணன், தனது மகன்களுடன் சென்னையில், உள்ள தென்னக ரெயில்வே அலுவலகத்திற்கு சென்று, பணி நியமன ஆணைக்கான சான்றிதழை கொடுத்த போது அந்த சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இது குறித்து நிலக்கோட்டை காவல்துறையினர், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
வாலிபர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குடகிப்பட்டி கிராமம் குப்பிலிபட்டியில் (17), வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய, வெங்கடேசன்(23), என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நத்தம் காவல்துறையினர், விசாரணை, நடத்தி வருகின்றனர்.