திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கருவாடு விற்பது போல் நூதன முறையில், குட்கா கடத்திய வாலிபரை உணவு பாதுகாப்பு அதிகாரி லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கொடைக்கானல், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல்!
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தா புரம் சேர்ந்த சிறுவன் கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் வழியில், அவர் குடும்பத்திற்கு நீண்ட நீண்டநாள் நெருங்கிய நண்பரான (62), வயது உடைய முதியவர். சிறுவனை தன் வீட்டிற்கு அழைத்து பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்கினார். பிறகு அந்த சிறுவனிடம் பணம் ரூபாய் 30 கொடுத்து தின்பண்டம்வாங்கிக்கொள்ளவும் என்று சொல்லி பிறகு உன் வீட்டாரிடம் சொல்லினால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த சிறுவன். பயந்து தன் வீட்டிற்கு இதை தெரியப்படுத்தாமல் வைத்துள்ளான். இதனால் வீட்டில் சிறுவன் தனது வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள் இருக்கவே அவனது பெற்றோர் அழைத்து விசாரித்தனர். அவர்களுக்கும் மகன் பாலியல் துன்பத்திற்கு உள்ளான உண்மை தெரியவரவே அவர்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்தினர். பிறகு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்ததின் பேரில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
ஆய்வாளரை மிரட்டிய,2 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளரை மிரட்டிய வழக்கில், தலைமறைவாக இருந்த முகமது அன்சாரி, முகமது இஸ்மாயில் ஆகிய 2 பேரை வத்தலகுண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஷேக் அப்துல்லா, அவர்களது தலைமையிலான காவல்துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.