திண்டுக்கல் : திண்டுக்கல் தெற்கு ரத வீதியில், உள்ள ஒரு உணவு விடுதி முன்பு கடந்த 8-ம் தேதி காரின் கண்ணாடியை உடைத்து 3 மடிக்கணினிகள், திருடப்பட்டு இருந்தன. இது குறித்து நகர் தெற்கு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து, எஸ். பி. திரு. சீனிவாசன், உத்தரவின்படி டி. எஸ்.பி. திரு. கோகுலகிருஷ்ணன், மேற்பார்வையில், நகர் தெற்கு ஆய்வாளர் திரு. இளஞ்செழியன், தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. ரவிசங்கர், நகர் குற்றத்தடுப்பு பிரிவு காவலர் எஸ்.எஸ். ஐ. திரு. வீரபாண்டியன், காவலர்கள் திரு. ஜார்ஜ் எட்வர்ட், திரு.ராதாகிருஷ்ணன், திரு. முகமது அலி, திரு. விசுவாசம், திரு. சக்திவேல், ஆகியோர் கொண்ட தனிப்படையினர்.
சிசிடிவி காவலர்கள் திரு. ஜான். மற்றும் திருமதி. செல்வி, ஆகியோர் உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து, மேற்படி குற்றத்தில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த தினேஷ் குமார்(27), என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 3 மடிக்கணினிகளை மீட்டு விசாரணை செய்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த தனபாண்டி(22), விக்னேஸ்வரன்(21) சிவகிரிபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார்(25) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து செயின் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருசக்கர வாகனம் அவனியாபுரம் பகுதியில் திருடப்பட்டது, என்பது விசாரணையில் தெரியவந்தது.
—————————-
திண்டுக்கல் மாவட்டம் , பழனியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட, மதுரையை சேர்ந்த தனபாண்டி(22), விக்னேஸ்வரன்(21), சிவகிரிபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார்(25), ஆகிய 3 பேரை காவல்துறையினர், கைது செய்து அவர்களிடமிருந்து செயின் மற்றும் இருசக்கர வாகனம், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருசக்கர வாகனம் அவனியாபுரம், பகுதியில் திருடப்பட்டது என்பது, விசாரணையில் தெரியவந்தது.