போதை காளான், விற்றவர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலையில், போதை காளான், கஞ்சா விற்ற கொடைக்கானலை சேர்ந்த கருப்பையா என்பவரை கொடைக்கானல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாஸ்டின் தினகரன், அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு.கிருஷ்ணகுமார், அவர்களது தலைமையிலான காவல் துறையினர் கைது செய்தனர்.
அவதூறு செய்திகளை, பரப்பியவர் கைது!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கருப்புசாமி (47), என்பவரின் பெயர், புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (29), போலியாக முகநூல் கணக்கு ஒன்றை துவங்கி அதில் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் தொடர்பான அவதூறு செய்திகளை பரப்பி வந்தது தொடர்பாக. திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர், போலியான முகநூல் கணக்கு முடக்கப்பட்டு, ராஜேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில், ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த, குற்றவாளி கைது!
திண்டுக்கல்லில், 2 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு 4 வருடங்கள் தலைமறைவாக இருந்து நீதிமன்ற பிடியானை நிலுவையில் உள்ள பேகம்பூர் சி .கே. சி .எம் காலனியை சேர்ந்த கணேசன் (30), என்பவரை நகர் தெற்கு காவல்துறையினர், கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
தகராறு காரணமாக கொலை, ஆயுள் தண்டனை!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சொத்து தகராறு காரணமாக ராஜேந்திரன் (50), என்பவரை குத்தி கொலை செய்த ராமச்சந்திரன் (30), என்பவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு.
மர்ம நபர், கைவரிசை!
திண்டுக்கல், அருகே பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்த காளீஸ்வரி (45), இவர், நகைக்கடையில் 3 பவுன் சங்கிலி வாங்கிய பின்னர் திண்டுக்கல்-ஆலம்பட்டி அரசு பேருந்தில், ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எம்.எம்.கோவிலூர் பிரிவு அருகே வந்தபோது நகை பையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்த தாலுகாகாவல் துறையினர், விரைந்து சென்று இருந்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நகை பையை திருடிய மர்ம நபர் இடையில் உள்ள ஏதோ பேருந்து நிறுத்தத்தில், இறங்கியது தெரியவந்ததை அடுத்து தாலுகா காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து நகை பையை, திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.