திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டி அருகே உள்ள ஐயங்கார் பேக்கரியில், தாலுகா காவல் துறையினர், திடீர் சோதனை மேற்கொண்ட போது அங்கு அரசால், தடை செய்யப்பட்ட 9 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன இதை அடுத்து விற்பனை செய்த விஜயகுமார் (25), என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில், ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ததன் பேரில், மேற்படி நபருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாலிபர் போக்சோவில் கைது!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஒட்டுப்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி (28), இவர் அதேபகுதியை சேர்ந்த (15), வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்றார். இது குறித்து செம்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து சட்டத்தின் கீழ் ராஜபாண்டியை கைது செய்தனர்.