கொலை வழக்கில், 2 பேர் கைது!
திண்டுக்கல் : திண்டுக்கல் முருகபவனம் அருகே கடந்த (03-06-2022), ம் பிரபாகரன் என்பவரை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட விஜய் என்ற வெள்ளைச்சாமி (24), ஆகிய 2 பேரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை கொடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ். திரு. பி.பாஸ்கரன், பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு. விசாகன், குண்டர் திறப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து காவல்துறையினர், குண்டர் தரப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில், அடைத்தனர்.
கடையை உடைத்து, கொள்ளையடித்தவர் கைது!
திண்டுக்கல் ஸ்டாலின் காட்டேஜ் பகுதியில், ரவுண்ட்ரோடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். என்பவர் மிக்சர் கடையை கடந்த மாதம் உடைத்து கொள்ளையடித்தது தொடர்பாக வடக்கு நகர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து திரு. எஸ். பி.பாஸ்கரன், உத்தரவின் படி டி.எஸ்.பி திரு. கோகுலகிருஷ்ணன், அறிவுறுத்தலின் பேரில் ஆய்வாளர் திரு. உலகநாதன், தலைமையில் நகர் குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர், எஸ்.எஸ். ஐ. திரு. வீரபாண்டியன், காவலர்கள் திரு. ஜார்ஜ், திரு. ராதா, திரு. முகமது அலி, திரு. சக்திவேல், திரு. விசுவாசம், ஆகியார் கொண்ட தனிப்படையினர், சிசிடிவி காவலர்கள் திரு. ஜான், மற்றும் திருமதி.செல்வி, உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மதுரை பழங்காநத்தம் பகுதியில், சேர்ந்த சேகர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை மீட்டு விசாரணை செய்கிறார்கள்.
