திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த பித்தளைபட்டியை சேர்ந்தவர் வித்யாபதி (48), இவர், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் சார்பு நிலைய அலுவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வித்யாபதி வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றார். இந்த நிலையில், இன்று காலையில் சக ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு வந்தனர். அப்போது தீயணைப்பு நிலைய அலுவலகத்தில், வித்யாபதி மயங்கிய நிலையில், கிடப்பதை பார்த்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா