திண்டுக்கல் : (26.05.2022) திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஏர்போர்ட் நகரில் (20.04.2022), அன்று பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜம்புளியம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார்(20), ஏர்போர்ட் நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (21), கரண் குமார் (21), மற்றும் பெரிய பள்ளபட்டியைச் சேர்ந்த ரஞ்சித் (21), மற்றும் ஸ்ரீதர் (22), ஆகிய 05 நபர்களை திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவல் துறையினர் , கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய, 05 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 05 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில், சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவை தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவல் துறையினர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கரண் குமார், ரஞ்சித் மற்றும் ஸ்ரீதர் ஆகிய 05 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா