திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நல்லமனார்கோட்டை சுந்தராபுரியை சேர்ந்த, செல்வராஜ் (45), மனைவி பவுன்தாய் (35), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பவுன்தாய் அதேபகுதியில், பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது கடைக்கு அடிக்கடி வந்த, கார்த்திக் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்துடன், பவுன்தாய் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் வடமதுரை காவல் துறையில், புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் திரு. பிரபாகரன், வழக்குபதிவு செய்து அவர்களை, தேடி வருகிறார்.
