திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , அய்யலூர் அருகே சந்தன மரக்கட்டைகள் , பதுக்கிய ராஜா,பாண்டி ஆகிய 2 பேரை வனச்சரகர் குமரேசன் தலைமையிலான, வனத்துறையினர் கைது செய்தனர்.
————————
காவல்துறையினருக்கு, பொது பொதுமக்களின் நன்றி : சாணார்பட்டி வி.ஏ.ஓ அலுவலகத்தில், குடிமகன்கள் அட்டகாசம். இதையடுத்து சாணார்பட்டி காவல் நிலைய, சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன், ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர், நேற்று அங்கு மது அருந்திக் கொண்டிருந்த குடிமகன்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். செய்தியை சுட்டிக் காட்டியவுடன் உடனடி நடவடிக்கை, எடுத்த சாணார்பட்டி காவல்துறையினருக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
