திண்டுக்கல் : பழனி காரமடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள, சாக்கடையில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடக்கிறார். காவல்துறையினர், விசாரித்து வருகின்றனர்.
———————————-
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள கசவனம்பட்டியை சேர்ந்த, ஆனந்தபாண்டி (42), என்பவர் அருகிலுள்ள மாட்டுக்கொட்டகையில், தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து கன்னிவாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில், மணிகண்டன் தனது மனைவி கருமணி செல்வியுடன் சேர்ந்து ஆனந்தபாண்டியை, கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை மாட்டுக்கொட்டகையில் தூக்கில் தொங்கவிட்டு, சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி கருமணி செல்வி, ஆகியோரை கைது செய்தனர்.
———————————
பழனியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, கொலை செய்யப்பட்ட நபரின் நினைவஞ்சலி போஸ்டரில், கொலையாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த கூட்டாளிகள். காவல்துறையினர், விசாரித்து வருகின்றனர்.