கோவை: கோவை துடியலூர் பக்கமுள்ள உருமாண்டம்பாளையம், ரோஸ் கார்டனை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 50)இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். விஜயலட்சுமி தனது மகள்கள் அர்ச்சனா ( வயது 24) அஞ்சலி (வயது 21) ஆகியோருடன் உருமாண்டம் பாளையத்தில் வசித்து வருகிறார்.மகள் அர்ச்சனா சாய்பாபா காலனியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். மற்றொரு மகள்அஞ்சலை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ஒரு ஐ.டி .கம்பெனியில் ஊழியராக வேலை பாரத்துவருகிறார்..நேற்று இரவு விஜயலட்சுமி வீட்டின் கதவு, ஜன்னலை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். இன்று காலையில் விஜயலட்சுமியின் மாமா அங்கு சென்றார்.கதவை தட்டிப் பார்த்தார். விஜயலட்சுமி திறக்கவில்லை.
சந்தேகத்தின்பேரில் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளேபுகை மண்டலமாக காட்சி அளித்தது. தாயும் 2 மகள்களும்தீயில் கருகி இறந்து கிடந்தனர்.வீட்டில் வளர்த்த ஒரு நாயும் செத்து கிடந்தது வீட்டில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். யுபிஎஸ் டீரென்று வெடித்து இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது . வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.