சென்னை : சென்னை ஜாம்பஜார், முனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (41), அச்சகத் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் 2-வது மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, கொண்டு சென்றனர். அங்கு பாண்டியராஜனை பரிசோதித்தமருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி ஜாம்பஜார் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.