தென்காசி : காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திர பாபு IPS அவர்களின் உத்தரவின் பேரிலும் ,தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருகிருஷ்ணராஜ் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் சட்டவிரோதமாக குட்கா,கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறை யினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம்.
அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த TN புதுக்குடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் பிரசாந்த்(26), புளியங்குடி பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரின் மகன் செய்யது அலி (48) மற்றும் தென்காசி பகுதியை சேர்ந்த அகமது ஷா என்பவரின் மகன் நாகூர் மைதீன் (29) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 70,000 மதிப்பிலான 80 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 9,12,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.