தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில் கள்ளசாராயம் மற்றும் போதைக்கு அடிமையாவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று தர்மபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் இசை வாத்தியம் மற்றும் பறை இசைகருவிகள் கொண்டும், பாடல்கள் பாடியும், கரகாட்டம் ஆடியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் கள்ளசாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீங்கு குறித்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பட்டன. இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
தர்மபுரியிலிருந்து
நமது குடியுரிடை நிருபர்