தர்மபுரி : பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் , அலுவலகத்தில் கலெக்டர் திருமதி. திவ்யதர்சினி, தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மனு அளிக்க அரூர் தாலுகா பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்த அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த , பாட்டில்களில் இருந்த மண்எண்ணெயை, திடீரென தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். பள்ளி மாணவ- மாணவிகள், உள்பட 20 பேர், ஒரே நேரத்தில் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த, காவலர் மற்றும் தீயணைப்பு படையினர், அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று தீக்குளிக்க முயன்றதை, தடுத்து நிறுத்தினார்கள். கூடுதல் ஆட்சியர் திரு. வைத்தியநாதன், பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் திருமதி, சாந்தி தீக்குளிக்க முயன்ற அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கூறியதாவது பல தலைமுறையாக, பயன்படுத்திவரும் 12 அடி பாதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்தப் பாதையை பயன்படுத்த முடியாத வகையில் இடையூறு உள்ளது. என தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள், மற்றும் காவலர்கள், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.