மயிலாடுதுறை : தருமபுரம் மாரியம்மன் கோவில் தெருவை, சேர்ந்த செந்தில் (33), இவர் மயிலாடுதுறை நகரில் பெட்டிக்கடை, வைத்து நடத்தி வருகிறார். இவர் பிளஸ்-1 மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் மயிலாடுதுறை, அனைத்து மகளிர் காவல் துறையில், புகார் கொடுத்தார். புகாரின்பேரில் காவல் துறையினர், காவல் ஆய்வாளர்திருமதி.சங்கீதா, போக்சோ, சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செந்திலை, கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.