தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், அணைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், (50), கூலித் தொழிலாளி. இவர், மனைவி மல்லிகா, (43), மற்றும் மூன்று குழந்தைகளுடன், செட்டியக்காட்டில் சாலமன் என்பவரின், தென்னை தோப்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதி மைக்கேல் துரையரசன், (57), பாஸ்கர், (45), இருவரும் மல்லிகாவை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட செல்வராஜை, அவர்கள் இருவரும் அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தினர். இதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, செல்வராஜ் மகன் பன்னீர்செல்வம், (31), கொடுத்த புகார்படி, அதிராம்பட்டினம் காவல் துறையினர், மைக்கேல் துரையரசனை கைது செய்தனர். தப்பியோடிய பாஸ்கரை தேடி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்