திருச்சி: திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரிந்து காவல் ஆளினர்களின் குடும்பங்களுக்கு கல்வி உதவி, மகப்பேறு உள்ளிட்ட தொகை தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து வழங்கப்பட்டது.திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவி தொகை, மகப்பேறு மருத்துவ உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு தொகையை வழங்கி உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
அதன்படி திருச்சி மாநகரத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களின் 9 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1,40,000/-மும், காவலர்களுக்கான மகப்பேறு மருத்துவ உதவி செலவிற்காக 21 காவல் ஆளிநர்களுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.5,25,000/-மும் மற்றும் காவல் ஆளிநர்களின் குடும்ப உறுப்பினர்களின் இறப்பிற்கு ஈமச்சடங்கு செலவுவிற்காக 12 காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகையாக ரூ.10,000/- வீதம் ரூ.1,20,000/-மும் ஆக மொத்தம் ரூ.7,85,000/- நிதியை தமிழ்நாடு காவலர் சேமநலநிதியிலிருந்து பெற்று, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப.,அவர்கள் வழங்கினார்கள். மேலும் கல்வி உதவி தொகை பெறுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரித்தார்கள்.