நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் , திருச்செங்காட்டங்குடியில் 30/ 04/ 2022 அன்று அதிகாலை நடைபெற்ற சப்பறத் திருவிழாவில், முட்டுக்கட்டை போடும் போது , அதிலிருந்து நிலை தடுமாறி, கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தில், சேர்ந்த பன்னீர்செல்வம், என்பவரின் மகன் தீபன்ராஜ், மீது சப்பரம் ஏறியதால், பலத்த காயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், ரூபாய் 5 லட்சம், பொது நிவாரண நிதியிலிருந்து, நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.