சென்னை: தமிழகம் முழுவதும் 14 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்ட IPS அதிகாரிகள் விபரம் பின்வருமாறு:
டிஜிபிக்கள்: (DGP)
1.மின்வாரிய கண்காணிப்பு டிஜிபியாக பதவி வகிக்கும் கே.பி.மகேந்திரன் தீயணைப்புத்துறை டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
2 திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக பதவி வகிக்கும் தீபக்.எம்.டேமர் சென்னை ரயில்வே டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபிகள்: (ADGP)
3.ரயில்வே கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் லட்சுமி பிரசாத் சிங், IPS மின்வாரிய கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
4. சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் சைலேந்திரபாபு, IPS ரயில்வே கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
5. அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் அஷுதோஷ் சுக்லா, IPS சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
6. சென்னை போலீஸ் போக்குவரத்து கழக கூடுதல் டிஜிபி மற்றும் சிறப்பு அதிகாரியாக பதவி வகிக்கும் ராஜேஷ் தாஸ், IPS அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7. குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் சுனில்குமார், IPS சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8. சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் கரன்சின்ஹா, IPS போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் அம்ரேஷ் புஜாரி, IPS குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஜிக்கள் (IG)
10. டெக்னிக்கல் பிரிவு ஐஜியாக பதவி வகிக்கும் செந்தாமரைக்கண்ணன், IPS சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மற்றும் உறுப்பினர் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11. சீருடை பணியாளர் தேர்வாணைய ஐஜி மற்றும் உறுப்பினர் செயலராக பதவி வகிக்கும் கல்பனா நாயக், IPS பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு (நிதி நிறுவனங்கள்) ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12. பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகிக்கும் அஷோக் குமார் தாஸ், IPS டெக்னிக்கல் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
13. சேலம் மாநகர ஆணையராக பதவி வகிக்கும் சஞ்ஜய் குமார், IPS பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14. அமலாக்கப்பிரிவு ஐஜியாக பதவி வகிக்கும் சங்கர், IPS சேலம் மாநகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.