தமிழகம் முழுவதும், 81 ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி., திரு.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு
தேனி மாவட்டம் சின்னமனூர் வட்டத்தில் பணிபுரிந்து வந்த திரு.என்.சீமயராஜ் காத்திருப்போர் பட்டியலுக்கும்,
திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் இருந்த திரு.என்.கெ.ரவிச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கும்,
பெருநகர சென்னை போக்குவரத்து விசாரணை பிரிவில் இருந்த பி.எஸ்.கந்தசாமி புலனாய்வு பிரிவிற்கும், சென்னை ஆர்.கெ.நகரில் பணிபுரிந்து வந்த திரு.பி.இராஜா உளவுதுறைக்கும், சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த திரு.ராயப்பன் யேசுநேசன் உளவுத்துறைக்கும், சேலம் தேவாட்டிபட்டியிலுள்ள திரு.பி.ரஜினிகாந்த் உளவுத்துறைக்கும்,
மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவில் இருந்த திரு.எஸ்.அழகர்சாமி உளவுத்துறைக்கும், சென்னை அடையாறு துரைபாக்கத்தில் இருந்த திரு.சி.வேலு உளவுத்துறைக்கும் மாற்றம் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி எட்டயபுரத்தில் பணிபுரிந்து வந்த திரு.இ.அராமையா திருநெல்வேலிக்கும், தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவில் இருந்த திரு.ஆர்.வனசுந்தர் திருநெல்வேலிக்கும், விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த திருமதி.ரியூபி தேவ சகாய ராணி தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
உளவுத்துறையில் இருந்த எஸ்.பூமரன் மேற்கு மண்டலத்திற்கும், உளவுத்துறையில் இருந்த சி.கண்ணன் தெற்கு மண்டலத்திற்கும், உளவுத்துறையில் இருந்த எஸ்.கருணாகரன் மத்திய மண்டலத்திற்கும், திருவண்ணாமலையில் பணிபுரிந்து வந்த எஸ்.பி.முருகேஸ்வரி பெருநகர சென்னைக்கும், சென்னை உளவுத்துறையில் இருந்த ஆர்.சரீனா மற்றும் ஆர்.நவரத்தினம் பெருநகர சென்னைக்கும், விழுப்புரத்தில் பணிபுரிந்து வந்த திருதி.ஆர்.ப்ரேமா பெருநகர சென்னைக்கும்,
திருவண்ணாலையில் இருந்த எஸ்.முருகன்,விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் இருந்த ஜோதிலட்சுமி, ராமநாதபுரம் உச்சிப்புலியில் இருந்த எம்.முருகன், உளவுத்துறையில் இருந்த திருமதி.எம்.மீனப்பிரியா, விழுப்புரம் சிறப்பு புலனாய்வு பிரிவில் இருந்த திருமதி.எஸ்.அனுராதா, திருவண்ணாமலை செங்கத்தில் இருந்த என்.கர்ணன், சென்னை உளவுத்துறையில் இருந்த ஆர்.சொர்ணலதா, உளவுத்துறையில் இருந்த பி.இராணி மற்றும் உளவுத்துறையில் இருந்த எஸ்.செந்தில்குமார் ஆகியோர் பெருநகர சென்னைக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர்.
இராமநாதபுரம் திருவாடனை மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த திருமதி.எ.முத்துமணி மற்றும் நீலகிரி உதகமண்டலத்தில் இருந்த திரு.வி.இராமன் ஆகியோர்கள் கோயம்புத்தூர் நகரத்திற்க்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் நத்தம் வட்டத்தில் பணிபுரிந்து வந்த பி.பார்த்திபன், சிவகங்கை தேவகோட்டையில் இருந்த எஸ்.குமரன், சிவகங்கை திருப்பத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் இருந்த சி.சாரதா, தூத்துக்குடி கழுகுலையில் இருந்த பி.ஷாஜகான், சென்னை பி1 காவல்நிலையத்தில் இருந்த மாடசாமி, மதுரை எ.எல்.ஜி.எஸ்.சி யில் இருந்த பி.வசந்தா ஆகியோர் மதுரை மாநகர காவல்நிலையத்திற்க்கு மாற்றம் பெற்றுள்ளனர்.
சேலம் ஓமலூரில் இருந்த எ.சரவணண், திருச்சி லால்குடி மகளிர் காவல்நிலையத்தில் இருந்த பி.விஜயா, திண்டுக்கலில் இருந்த ஆர்.அம்பிகா ஆகியோர்கள் சேலம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி உளவுத்துறையில் பணிபுரிந்துவந்த கெ.சண்முகவேல், பெரம்பலூர் மங்களமேட்டில் இருந்த எ.ஞானசேகர், நாகப்பட்டினம் பாலயூரில் இருந்த கெ.காவேரி, திருநெல்வேலியில் எ.எல்.ஜி.எஸ்.சி யில் இருந்த இ.காமராஜ், நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் இருந்த எம்.மகேஸ்வரி, புதுகோட்டையில் பணிபுரிந்து வந்த எஸ்.விஜயகுமார் ஆகியோர்கள் திருச்சி நகர காவல்நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளனர்.
நீலகிரி சேரம்பாடியில் இருந்த எஸ்.சாலை ராம் சக்திவேல் திருப்பூருக்கும் மாற்றம் பெற்றார்.
திருநெல்வேலி பாளையம்கோட்டையில் இருந்த என்.பால்ராஜ், சென்னை கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்த பி.இராஜேந்திரன், அரக்கோணம் ரெயில்வே காவல்துறையில் இருந்த டி.லதா ஆகியோர்கள் மேற்கு மண்டலத்திற்கும் மாற்றம் பெற்றுள்ளனர்.
இராமநாதபுரம் தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் இருந்த எ.முரளி, இராமநாதபுரத்தில் இருந்த என்.சாந்தி, தூத்துக்குடி ஆறுமுகநேரியில் இருந்த எம்.சிவலிங்கம், அரியலூரில் இருந்த என்.மாலதி, புதுகோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.பிரபாவதி, தஞ்சாவூர் புடலூரில் இருந்த டி.அம்மாதுரை, கிருஷ்ணகிரி உளவுத்துறையில் இருந்த ஆர்.முருகன், தூத்துக்குடி காடாம்பூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த சி.ஜெயராஜ், தஞ்சாவூர் குற்றவிசாரணை பிரிவில் இருந்த எ.நாகமணி, கோவை சொத்து அமலாக்க பிரிவில் இருந்த டி.ஜெயக்குமார், சேலம் நகர குற்றபிரில் இருந்த எம்.சரோஜினி, ஈரோடு ரெயில்வே காவலில் இருந்த சி.சின்னதங்கம், சென்னை கெ6 ல் காவல் நிலையத்தில் இருந்த தயால், இராமநாதபுரம் முடகுளத்தூர் வட்டத்தில் சேவை புரிந்து வந்த பி.சரவணன் உட்பட அனைவரும்
மேற்கு மண்டலத்திற்க்கும் மாற்றம் பெற்றுள்ளனர்.
திருப்பூர் குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவில் இருந்த டி.மோகனசுந்தரி மற்றும் இராமநாபுரம் ஆர் எஸ் மங்களத்தில் இருந்த எஸ்.பழனிச்சாமி ஆகியோர் மத்திய மண்டலத்திற்கு; மாற்றப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி எ.எல்.ஜி.சி பிரிவில் இருந்த எஸ்.கனகராஜ் கடற்கரையோர காவல் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருவாரூர் உளவுத்துறையில் இருந்த ஜெ.மகாலட்சுமி மற்றும் தஞ்சாவூர் குற்றப்புலநாய்வு பிரிவில் இருந்த எ.ஜோதிலட்சுமி ஆகியோர் ரெயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டனர்.
மதுரை உசில்பட்டி மகளிர் காவல்நிலைத்தில் பணிபுரிந்த ஆர்.காயத்ரி, சென்னை சொத்து தகறாரு பிரிவில் இருந்த யு.விஜயலட்சுமி, திருப்பூர் போக்குவரத்து பிரிவில் இருந்த ஜெ.ஸ்ரீ அனு பல்லவி, கன்னியாகுரி நேசணி நகர் வட்டத்தில் பணிபுரிந்து வந்த ஜி. சாயிலட்சுமி, இராநாதபுரம் கீழக்கரை வட்டத்தில் இருந்த ஆர்.திலகவதி, சென்னை பாதுகாப்பு பிரிவில் இருந்த பி.விஜயகுமாரி, மதுரை டி.கல்லுப்பட்டியில் பணிபுரிந்து வந்த டி.மாலினி ஆகியோர் உளவுத் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.