தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்
1.திரு. டி.கல்பனா நாயக் ஐபிஎஸ் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. திரு.மகேந்திர குமார் ரத்தோடு ஐபிஎஸ் தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. திரு.அருண் பாலகோபாலன் ஐபிஎஸ் நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர், பதவி உயர்வு பெற்று மதுரை நகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
4. திரு.என்.ஸ்டீபன் ஜேசுபாதம் ஐபிஎஸ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசேஷ புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளராக
மாற்றப்பட்டுள்ளார்.
5. திரு. பி.தங்கத்துரை ஐபிஎஸ் கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று. சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
6.திரு. ஆர்.ராமகிருஷ்ணன் ஐபிஎஸ் சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றிய இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
7. திரு. எம்.துரை ஐபிஎஸ் இவர் கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக பணியாற்றி இவர் . கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
8. திரு. ஜி.தர்மராஜன் ஐபிஎஸ் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான இவர் கோவை நகர தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. திரு. ஜெ.மகேஷ் ஐபிஎஸ் மதுரை நகர தலைமையக துணை காவல் ஆணையராக
நியமிக்கப்பட்டுள்ளார்
10. திரு.ஏ.மயில்வாகணன் ஐபிஎஸ் மதுரை நகர தலைமையக துணை ஆணையராக பணியாற்றிய இவர் திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
என தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது