சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலர்கள் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக காவல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் நாளை ரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இந்த ரத்த தான முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் ரத்த தானம் செய்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடந்து வருகிறது.இந்த ரத்த தான முகாமில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 40 வயதுக்குட்பட்ட போலீசார் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்ய உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஜெயக்குமார்,விஜயபாஸ்கர், வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி., டி.கே.ராஜேந்திரன்இ சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.