தமிழகம் முழுவதும், 54 உதவி- ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி., திரு.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாநகரில் பணிபுரியும் திரு.தினேஷ், சரண்யா ஆகியோர், சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் பணிபுரியும் திரு.கார்த்தி, பூங்கொடி, இந்துஜா, பெரம்பலூரில் பணிபுரியும் திரு.கணேசன் ஆகியோர், ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை சரண்யா, சென்னை திரு.பாலு ஆகியோர் கிருஷ்ணகிரி, சென்னை சுகன்யா, திரு.ஜெயபாலாஜி – வேலூர், சென்னை திரு.பிரபாகரன் – தர்மபுரி, நாமக்கல் திரு.கார்த்திகேயன், தர்மபுரி திரு.சந்திரசேகரன், சென்னை திரு.சீனிவாசன், திரு.ஜெயசீலன், அரியலூர் ரேவதி ஆகியோர், சேலம் மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள், உள்பட, 54 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, புதிய ஸ்டேஷன்களை, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர் ஒதுக்கீடு செய்வர் என, காவல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.