தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.16 பேரில் 9 டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில்,
- சென்னை காவல்துறை நிர்வாக ஐஜியாக ஆர். தினகரன் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- வித்யா ஜெயந்த்குல்கரனி காவல்துறை தலைமையக ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- சென்னை உளவுத் துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்படுள்ளார்.
- கரூர் காகித நிறுவன கண்காணிப்பு ஐஜியாக சந்திரசேகர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
- ஓம்பிரகாஷ் மீனா சென்னை குற்றவியல் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
- தென்காசி ஏஎஸ்பி ஷாஷாங் சாய் சென்னை பூக்கடை துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி ஐஜியாக மஞ்சுநாதா டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை ஐஜியாக இருந்த அமரேஷ் புஜாரி மனித உரிமை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஆவின் ஐஜியாக இருந்த ரவி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஜெயந்த் முரளி தமிழ்நாடு போக்குவரத்து திட்டக் குழு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பதவி உயர்வு பெற்ற அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அவர்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது செய்தியாளர்
குடந்தை.ப.சரவணன்