சென்னை: சிகரெட், பீடி, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் மெல்லும் வகையிலான புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள்.
தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் புகையிலை மற்றும் நிக்கோட்டின் உள்ள குட்கா, பான் மசாலா மற்றும் வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்ய தடை விதித்தது. இந்த தடை ஆணையைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான காண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
காவல்துறையினர் தீவிர கண்காணிப்பால் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.17 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 568 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பது தெரியவந்தால் அவற்றை காவல்துறையினர் மாநில உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2013 ஜூன் முதல் 2018 மார்ச் வரையிலான 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 4 ஆயிரம் கடைகளில் இருந்து உணவு பாதுகாப்புத் துறையினர் 567.62 டன் தடை செய்யப்பட்ட குட்காஇ பான்மசாலா போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு மட்டும் ரூ.17 கோடியே 8 லட்சம் ஆகும்.
இதில்இ கடந்த 2016-17-ம் ஆண் டில் நடைபெற்ற சோதனையில் 19இ139 கடைகளில் இருந்து குட்காஇ பான் மசாலா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையானது 2017-18-ம் ஆண்டில் 23இ605 கடைகளாக அதிகரித்துள்ளது.
எங்கேனும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரிந்தால் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் உணவு பாதுகாப்புத் துறையைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.