கடலூர் : சிதம்பரம் புதுச்சேரி வில்லியனூர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் பாண்டியன(40), இவர் தனக்கு சொந்தமான 2 பேருந்துகளை புதுச்சேரியில், உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு ஒப்பந்த அடிப்படையில், இயக்கி வந்தார். இதில் ஒரு பேருந்தின் ஓட்டுநராக சிதம்பரம் தில்லை காளியம்மன் தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவா் உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் நிறுத்தி விட்டு பாஸ்கர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது பஸ்சை காணாமல் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பேருந்து உரிமையாளர் பாண்டியனிடம் செல்போனில், தெரிவித்தார். உடனே அவர் புதுச்சேரியில், இருந்து காரில் புறப்பட்டு சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கடலூர் புதுநகர் நிலையம் அருகில் காணாமல் போன தனது பேருந்து நிற்பதை பார்த்த பாண்டியன், உடனடியாக புதுநகர் காவல் நிலையத்தில், தகவல் தெரிவித்தார். காவல் துறையினர் உடனே சென்று அந்த பேருந்தை சோதனை செய்த போது அதில் 2 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் நடுவீரப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்த ராமதிலகன் மகன் அஜித்குமார் (24), கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்த பெரியசாமி (52), என்பதும், இருவரும் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில், நிறுத்தி வைத்திருந்த பேருந்தை மது போதையில் திருடி வந்ததும் தெரிய வந்தது. இ்தையடுத்து 2 பேரையும், அந்த பேருந்தையும் சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இது குறித்து பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார், பெரியசாமி, ஆகியோரை கைது செய்தனர்.