சென்னை : ஆவடி காவல் ஆணையரகம் ஆவடி காவல் மாவட்டம் SRMC சரகத்தில், இரவு நேரங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டி, ஆவடி காவல் ஆணையர் திரு. சந்திரிகா அவர்களின் உத்தரவின் பேரில், ஆவடி மாவட்ட காவல்துறை ஆணையர் திரு. மகேஷ். அவர்களின் நேரடி மேற்பார்வையில், SMRC காவல் உதவி ஆணையாளர் திரு. எம். பழனி அவர்களின் தலைமையில், T14 மாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. லதா மகேஸ்வரி, காவல் உதவி ஆய்வாளர் திரு.விஜயகுமார், திரு. பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் திருநாவுக்கரசு வேல்முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் 17.04.2022 தேதி 5.00 மணிக்கு சிக்கராயபுரம் சந்திப்பு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற, இரண்டு நபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிக்கராய புரத்தை சேர்ந்த ராஜன் (46) , திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமார் (24) என்பது தெரியவந்தது.
விசாரணையில் மாங்காடு காவல் நிலைய எல்லைக்குள், இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதாக ஒப்புக் கொண்டனர். மேலும் குற்றவாளிகள் கோவை குனியமுத்தூர், மதுரவாயல் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
மேற்படி குற்றவாளிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் சுமார் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இதன் மதிப்பு சுமார் 25 லட்சம் ஆகும். குற்றவாளிகளை கைது செய்து களவு போன பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரின் செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
திருமதி.மைதிலி கோபிநாத்
செய்திவாசிப்பாளர்