சென்னை: காசிமேடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஜீவந்தன் என்பவர், வடக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்களின் தனிப்படை காவல் குழுவினரால் கைது. 600 கிராம் கஞ்சாகைப்பற்றப்பட்டது. 80 LSD ஸ்டாம்ப் கைப்பற்றப்பட்டது. 151 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
1 கிராம் மெத்தம்பெடமைன் மற்றும் பணம் பறிமுதல். சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையைச் சேர்ந்த காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படை காவல் குழுவினர் மற்றும் காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் 23.03.2022 அன்று மதியம் 1.00 மணியளவில் தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்த போது, அங்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி வீட்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஜீவந்தன் (வ/25) தண்டையார்பேட்டை.
என்பவர் மீது காசிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சா, 80 LSD ஸ்டாம்ப், 151 போதை மாத்திரைகள், 1 கிராம் மெத்தம்பெடமைன் மற்றும் ரொக்கம் ரூ.15,000/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜீவந்தன் வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி சென்னையில் பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.