மதுரை: மதுரை மாவட்டத்தில், தாக்கலாகி கண்டுபிடிக்கப்படாமல் உள்ள கன்ன களவு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உத்தரவு இட்டதின்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையின் தீவிர முயற்சியால், இலங்கை உச்சப்பட்டி அகதி முகாமைச் சேர்ந்த முனியாண்டி மகன் கேத்தீஸ்வரன் @ சந்திரகுமார் 34. என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், திருமங்கலம் உட்கோட்டம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் தாக்கலான கன்ன களவு வழக்குகளில சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. கன்னக்களவு வழக்குகளில் சம்பவ இடங்களை கைவிரல் ரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட கைவிரல் ரேகை மாதிரிகளை மேற்படி சந்திரகுமாரின் கைரேகையுடன் ஒப்பீடு செய்து, அதில் கை ரேகை ஒத்துபோனது. பின்னர், அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் 3 மேலும் வழக்குகளில் தொடர்பு உள்ளது தெரிய வந்தது . அதன்பேரில், அவரை கைது செய்தும், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் கைப்பற்றப்பட்டு, சந்திரகுமாரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி, நான்கு வழக்குளில் களவுபோன சுமார் 60 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேற்படிவழக்குகளில் ,புலன்விசாரணை மேற்கொண்டு, களவுபோன சொத்துக் களையும் கைப்பற்றி தனிப்படையினரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் பாராட்டினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















