திருவண்ணாமலை : மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில், திருவண்ணாமலை நகர காவல்நிலைய குற்ற எண் 101/2022, U/s 394 IPC வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr. K. கார்த்திகேயன், இ. கா. ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை நகரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.குணசேகரன், அவர்களின் மேற்பார்வையில்,திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.R. சிவசங்கர், திருவண்ணாமலை நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.D. ராஜீவ் காந்தி ஆகியோர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து மேற்படி குற்றச் சம்பவம் நடைபெற்ற இடங்களின் அருகில் உள்ள 67 கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்து குற்றவாளியிடமிருந்து 08 சரவரன் நகைகளை மீட்டுள்ளனர். இச்செயலுக்கு தனிப்படையில் திறம்பட செயலாற்றிய அனைத்து காவல் அலுவலர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்