சென்னை : சென்னை, வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள வீட்டில், வசித்து வந்தவர் குமரேசன் (75), ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான, இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில் மகன் குணசேகரன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முதல் தளத்திலும், இரண்டாவது தளத்தில் குமரேசன் தனது மூத்த மகள் காஞ்சனமாலாவுடன், வசித்து வந்தார். கடந்த 15ஆம் தேதி காஞ்சனமாலா அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, தந்தை காணவில்லை. பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே பார்த்த போது ரத்தக்கரைகள் இருந்ததால், குணசேகரன் கொலை செயப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அவரது மகன் குணசேகரன் தலைமறைவானார். இதுகுறித்து வளசரவாக்கம் காவல் துறையினர் , விசாரணை மேற்கொண்டதில் தந்தை குமரேசனை கொலை செய்து காவேரிப்பாக்கத்தில் உள்ள, ஒரு இடத்தில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் கொலையை மறைக்க காரணமாக, இருந்த ஆட்டோ டிரைவர் திருமூர்த்தி, என்பவரை காவல் துறையினர், கைது செய்து அவரது முன்னிலையில் உடலை, தோண்டி எடுத்தனர். இதையடுத்து இன்று தாசில்தார் மற்றும் ஆர்டிஓ முன்னிலையில் புதைக்கப்பட்ட குமரேசன், உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை, முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக உள்ள, குணசேகரனை பிடிக்க 5 தனிப்படை காவல் துறையினர் , தீவிரமாக தேடுதல் பணியில், ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தந்தையை எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்தான முழுமையான, விவரம் குணசேகரன் பிடிபட்டால் மட்டுமே தெரியவரும், எனவும் காவல் துறையினர் ,தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.