திண்டுக்கல்: காற்றின் ஈரப்பதத்தில் தண்ணீரை உற்பத்தி செய்யும் எந்திரம் பல்வேறு நகரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு எந்திரத்தில் தினமும் 500 லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய முடியும். v குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியசில் இருந்து இது தண்ணீரை உற்பத்தி செய்யும். மண்ணில் உள்ளதுபோல படிமங்கள்.
இல்லாமல் காற்றின் மூலம் தூய்மையான தண்ணீரை இதன் மூலம் பெறப்படும். உற்பத்தி செய்யும் தண்ணீரை சாதாரண நிலை, குளிர்ந்த நிலை, சூடான நிலை என 3 முறைகளில் வினியோகம் செய்யும் வசதியும் உள்ளது. இதனை தயாரிப்பதற்கு மின்சாரம் மட்டுமே போதுமானது. ஒரு லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்ய ரூ.1.80 பைசா மட்டுமே செலவாகும்.